எங்கள் வீரர்களும் மரணம்- ரஷ்யா முதன் முறையாக ஒப்புதல்

எங்கள் வீரர்களும் மரணம்- ரஷ்யா முதன் முறையாக ஒப்புதல்

உக்ரைனுக்கு எதிரான போரில் தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு, பலரும் காயமடைந்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

5வது நாளாக ரஷ்யா- உக்ரைன் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இரு நாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் பதிலடி கொடுத்து வருகின்றனர். போரில் 4,500 வீரர்கள் இறந்துவிட்டதாகவும், ஏராளமான ரஷ்ய ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர், தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு, பலரும் காயமடைந்திருக்கின்றனர். உக்ரைன் தரப்பைவிட தங்கள் தரப்பில் பாதிப்பு பல மடங்கு குறைவு. தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனில் ராணுவ தளங்களை தங்கள் படைகள் தாக்கியுள்ளது" என்று கூறினார். எனினும் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in