மீத்தேன் வாயு கசிவு... பற்றி எரிந்த சுரங்கத்தில் 45 பேர் பலி; நிறுவனத்துக்கு அரசு கொடுத்த அதிர்ச்சி
கஜகஸ்தானில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் சுரங்கத்திற்குள் சிக்கி இருக்கிறார்களா என தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தானின் காரகண்டா பகுதியில் ஆர்சிலர் மெட்டல் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சனிக்கிழமை இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் 45 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் சோகம் நிலவி வருகிறது. கஜகஸ்தானில் நடைபெற்றுள்ள மிக மோசமான சுரங்க விபத்து இது என கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மீத்தேன் வாயு கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து கஜகஸ்தானில் தேசிய துக்க நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கு சொந்தமான இந்நிறுவனம் மீது அந்நாட்டு அதிபர் காசிம் ஜோமர்ட் டொக்காயேவ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தொழிலாளர்களின் நலனில் நிறுவனம் அக்கறை காட்டாததே இந்த விபத்திற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள அவர், ஆர்சிலார் நிறுவனத்தின் கஜகஸ்தான் அலுவலகத்தை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!
அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!
110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!
1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!
படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!