கடும் சரிவைக் கண்ட கிரிப்டோகரன்சி!- கலக்கத்தில் முதலீட்டாளர்கள்!

கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி

அதிக சந்தை மதிப்புள்ள பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு ஒரே நாளில் 27,500 கோடி டாலர் அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதனால் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி

டிஜிட்டல் பணமான கிரிப்டோகரன்சிகளில் அதிக சந்தை மதிப்பு கொண்ட பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 14 சதவீதம் அளவிற்கு மதிப்பு இழந்தது. பத்திற்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் 25 சதவீதத்திற்கும் மேலாகச் சந்தை மதிப்பை இழந்துள்ளன. யுஎஸ்டி காயினின் மதிப்பு ஒரு மாதத்தில் மட்டும் 97 சதவீதத்திற்கு அதிகமாகச் சரிந்து, ஒரு டாலருக்குக் கீழ் குறைந்துள்ளது. Shiba Inu, Dogecoin, Polkadot, Solana, BNB, Cardano மற்றும் Avalanche உள்ளிட்ட முன்னணி கிரிப்டோகரன்சிகள் கடந்த 24 மணி நேரத்தில் அவற்றின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை இழந்துள்ளன. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட டெர்ரா முதலீட்டாளர்களின் 99.9 சதவீத செல்வத்தை அழித்துவிட்டது.

பணவீக்கம் அதிகரிப்பு, பொருளாதார மந்தநிலை போன்ற அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்சிகளை விற்று விட்டு வெளியேற முயல்வதால் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் இந்த நிலையில் மாற்றம் நிகழலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in