கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்லும் நாட்டுப்படகுகள்: பாம்பனில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

கச்சத்தீவு செல்லும் படகுகளில் ஆய்வு
கச்சத்தீவு செல்லும் படகுகளில் ஆய்வுபாம்பனில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவிற்குச் செல்லும் நாட்டுப்படகுகளில் பாம்பன் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 3, 4 தேதிகள் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 2, 400 பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக, 60 விசைப்படகுகள், 12 நாட்டுப்படகுகள் அனுமதி கோரியுள்ளன. இவற்றின் பதிவெண், உரிமம் புதுப்பிப்பு, பாதுகாப்பு சாதனங்கள், படகின் தற்போதைய நிலை குறித்து பாம்பன் மீன்வளத்துறை அதிகாரிகள் மகேந்திரன், சங்கர் உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர்.

அப்போது படகுகளை அதன் உரிமையாளர்கள் முன்னிலையில் இயக்கச் செய்து ஆய்வு நடத்தினர். படகில் அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டும், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து அழைத்துச் செல்ல வேண்டும். தடையின்மை சான்று வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து மார்ச் 3 ம் தேதி காலை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் நாட்டுப்படகுகள், விசைப்படகுகளில் கடற்படை, மெரைன் போலீஸார் இறுதி ஆய்வு செய்ய உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in