குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி: அனுமதிகோரும் பைசர்!

தடுப்பூசி
தடுப்பூசிதி இந்து (கோப்புப் படம்)

5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு முகமையிடம் பைசர் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து உலகத்தை அச்சுறுத்தி வருகிறது கரோனா வைரஸ். இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்தியாவில் கரோனா 2-வது அலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். கரோனா வைரஸை அழிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்காவிட்டாலும், மனிதர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பல நாடுகளில் முதலில் முதியோர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. பின்னர், படிப்படியாக 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசி செலுத்துவது பல கட்டங்களை தாண்டிவிட்ட நிலையில், இந்தியாவில் இன்னும் முதல் தடுப்பூசி போடாதவர்கள் லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர். தற்போது, 15 வயது முதல் 18 வயது உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 12 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மத்திய சுகாதாரத் துறை எடுத்து வருகிறது.

இதனிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிகளை அந்நாட்டு மக்கள் முதல், இரண்டு என பூஸ்டர் டோஸ் வரை போட்டு வருகின்றனர். இந்நிலையில், 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு முகமையிடம் பைசர் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. 2 டோஸ்களாக இந்தத் தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in