வேகம் காட்டும் கரோனா எண்ணிக்கை: உலகம் முழுவதும் 67.18 கோடி பேர் பாதிப்பு

வேகம் காட்டும் கரோனா எண்ணிக்கை: உலகம் முழுவதும் 67.18 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67.18 கோடியாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் தற்போது அறிவித்துள்ளபடி உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67,18,36,029 ஆகும். உலகம் முழுவதும் கரோனாவினால் 6,7,33,341 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், 64,32,65,537 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என்றும் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 2,18,37,151 கரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனாவால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,36,14,411 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 11,25,895 ஆகும். 10,04,92,975 பேர் குணடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,81,884 ஆகும். இந்தியாவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,30,726 என்பதும், குணமானோர் எண்ணிக்கை 4,41,48,472 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in