நாளுக்கு நாள் உயரும் கரோனா; உலகம் முழுதும் அதிகரிக்கும் உயிரிழப்பு

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

உலகம் முழுதும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், உயிரிழப்பும் உயர்ந்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

உலகம் முழுதும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 391,270,653 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 75,342,913 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 310,184,637 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரஸால் உலகம் முழுதும் இதுவரை 5,743,103 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 281,469 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் 2,619 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இன்று ஒரேநாளில் 125,941 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,056 பேர் இறந்துள்ளனர். பிரேசிலில் ஒரேநாளில் 219,298 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,068 பேர் உயிரிழந்துள்ளனர். 15,159 பேர் குணமடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in