அமெரிக்கா, இங்கிலாந்தில் தொடர்ந்து சரிந்து வரும் கரோனா பாதிப்பு!

உலக அளவில் பாதிப்பு 35.47 கோடியாக அதிகரிப்பு
கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனைhindu கோப்பு படம்

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் தினசரி கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உலக அளவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35.47 கோடியாக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் 2019ஆம் ஆண்டு கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 கோடியே 47 லட்சத்து 14 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 74 லட்சத்து 63 ஆயிரத்து 461 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 28 கோடியே 16 லட்சத்து 29 ஆயிரத்து 299 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 56 லட்சத்து 21 ஆயிரத்து 905 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனைhindu கோப்பு படம்

உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 19,87,696 பேர் கரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் 35,47,14,665 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அங்கு புதிதாக 4,25,665 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, மொத்தமாக 7,28,59,674 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த இரண்டு நாட்களாக 1 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. அந்நாட்டில் 1,59,53,685 பேருக்கு இதுவரை கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்சில் தினசரி பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதுவரை 1,68,00,913 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் புதிதாக 77,263 பேருக்கும், மொத்த பாதிப்பு 10,001,344 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதுவரை 3,95,43,328 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in