கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனைhindu கோப்பு படம்

மீண்டும் அதிகரிக்கும் கரோனா; அமெரிக்காவில் ஒரேநாளில் 2,655 பேர் மரணம்

உலக அளவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38.17 கோடியாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,47,366 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2,655 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுதும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 கோடியே 17 லட்சத்து 66 ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 45 லட்சத்து 3 ஆயிரத்து 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 30 கோடியே 15 லட்சத்து 58 ஆயிரத்து 908 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரஸால் உலகம் முழுதும் இதுவரை 57 லட்சத்து 4 ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,47,366 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் 2,655 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரேநாளில் 1,58,576 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் 1,728 பேர் மரணமடைந்துள்ளனர். அதேபோல பிரேசிலில் ஒரேநாளில் 1,71,028 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 767 பேர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் 1,56,919 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in