அமெரிக்கா: கரோனா உயிரிழப்பு 9.45 லட்சமாக அதிகரிப்பு!

உலக அளவில் 41.37 கோடி பேர் பாதிப்பு
அமெரிக்கா: கரோனா உயிரிழப்பு 9.45 லட்சமாக அதிகரிப்பு!

அமெரிக்காவில் இதுவை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.45 லட்சமாக அதிகரித்துள்ளது. உலக அளவில் 41.37 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 37 லட்சத்து 56 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 24 லட்சத்து 7 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து, இதுவரை 33 கோடியே 55 லட்சத்து 5 ஆயிரத்து 389 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், இதுவரை 58 லட்சத்து 43 ஆயிரத்து 766 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரேநாளில் 54,118 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் 79,454,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,45,423 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 42,690,794 பேராக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,09,388 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் மொத்தம் 27,541,131 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 23,969,577 ஆக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in