ஒரேநாளில் 11,328 பேரின் உயிரைப் பறித்த கரோனா!

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனைhindu கோப்பு படம்

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 11,328 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்த நாட்டில் மட்டும் ஒரே நாளில் 2,398 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா வைரஸ் 221 நாடுகள், பிரதேசங்களை இன்றும் அச்சுறுத்தி வரும் நிலையில், வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்திலும், வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 கோடியே 50 லட்சத்து 14 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 30 கோடியே 50 லட்சத்து 5 ஆயிரத்து 847 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 57 லட்சத்து 17 ஆயிரத்து 50 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 11,328 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,59,828 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் 2,398 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்றைய பாதிப்பைவிட இன்று அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 164,593 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 991 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசிலில் ஒரே நாளில் 1,88,552 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 946 பேர் உயிரிழந்துள்ளனர். 1,56,919 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in