`கோத்தபய பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்'- கொந்தளிக்கும் போராட்டக்காரர்கள்!

கோத்தபய ராஜபக்சே
கோத்தபய ராஜபக்சே

``அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்ச பதவி விலகும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை'' எனப் போராட்டக்காரர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதனால் இலங்கையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

இலங்கையில் தொடர் போராட்டங்கள் காரணமாகப் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில், அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என இலங்கை மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகிய நிலையில், புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கோத்தபய ராஜபக்ச ஈடுபட்டு வந்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோரைச் சமாதானப்படுத்தவும் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக அறிவித்தார் அதிபர் கோத்தபய ராஜபக்ச. இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி இரவு ரணில் விக்கிரமசிங்கே நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கை கலவரம்
இலங்கை கலவரம்

நாட்டில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனாலும், இலங்கை முழுவதும் கலவரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்ச பதவி விலகும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in