கின்னஸ் குழுவை வாய் பிளக்கச் செய்த சாதனை... 6 நிமிடங்களுக்கு சீனர் வாயிலிருந்து வெளிப்பட்ட நீரூற்று

மா ஹூய் கின்னஸ் சாதனை
மா ஹூய் கின்னஸ் சாதனை

உலக சாதனைகள் பலவிதம். அவற்றில் சில, இதெல்லாம் ஒரு சாதனையா என வேடிக்கையுடன் வியக்க வாய்ப்புள்ளவை. அப்படியொரு கின்னஸ் சாதனையை சீனர் ஒருவர் அண்மையில் அரங்கேற்றி இருக்கிறார். வாயில் விழுங்கிய லிட்டர் கணக்கிலான நீரை, சாவகாசமாய் வாய்வழி வெளியேற்றுவதில் இவரது கின்னஸ் சாதனை சாத்தியமாகி இருக்கிறது.

சீனாவைச் சேர்ந்த, 35 வயதான மா ஹுய் என்பவர் 4.5 லிட்டர் தண்ணீரை விழுங்கிய கையோடு, அதனை 5 நிமிடம் 51.88 வினாடிகளுக்கு தொடர்ந்து வாயிலிருந்து பீய்ச்சி எடுத்துள்ளார். சுமார் 6 நிமிடங்களுக்கு தனது வாயை சிறிய நிரூற்று போலாக்கி பார்வையாளர்களையும், கின்னஸ் குழுவையும் வாய்பிளக்கச் செய்துள்ளார்.

மா ஹூய் கின்னஸ் சாதனை
மா ஹூய் கின்னஸ் சாதனை

இத்தகைய பிரிவில் இதற்கு முந்தைய சாதனையானது 2016-ம் ஆண்டு எத்தியோப்பியாவைச் சேர்ந்த கிருபெல் யில்மா என்பவரால் வெறும் 56.36 வினாடிகள் மட்டுமே நிகழ்த்தப்பட்டு இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் மா ஹூய், எவராலும் எளிதில் முறியடிக்க இயலாத பல மடங்கு தீவிரமான சாதனையை படைத்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மா ஹூய் நிகழ்த்திய சாதனையின் வீடியோவை இன்று பகிர்ந்துள்ளது. எடுத்ததும் 4.5 லிட்டர் தண்ணீரை மா ஹூய் விழுங்குவதுடன் வீடியோ தொடங்குகிறது. அதன் அடுத்த விநாடியிலிருந்து விழுங்கிய நீரை நிதானமாக வாய் வெளியே வாளி ஒன்றுக்கு மாற்றுகிறார் மா ஹூய். அவர் அருகிலிருக்கு நிறுத்து கடிகாரம் ஒன்று, மா ஹூய் எவ்வளவு நேரம் வாயால் நீரை பீய்ச்சியடிக்கிறார் என பதிவு செய்கிறது.

சாதனையின் நிறைவாக, ​பதிவு செய்யப்பட்ட நேரம் 5 நிமிடங்கள் 51.88 வினாடிகள் எனக் காட்டுகிறது. முந்தைய சாதனையைவிட மா ஹூய் நிகழ்த்தியிருப்பது 6 மடங்கு அதிகமானது என்பதால், இப்போதைக்கு மா ஹூய் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம் என்று சொல்லப்படுகிறது.

வாயால் விழுங்கிய நீரை நிதனமாக வெளியில் எடுப்பது, 17-ம் நூற்றாண்டிலிருந்து புகழ்பெற்றிருக்கும் நுட்பங்களில் ஒன்று. அதிக அளவு தண்ணீரைக் குடிப்பது மற்றும் வயிற்றுத் தசையை முறைப்படி கட்டுப்படுத்தி, விழுங்கிய நீரை வெளியே நிதானமாக எடுப்பது இந்த நுட்பத்தில் அடங்கும். இதற்கு ஒருவர் தனது வயிற்றின் தசைகளை சிறப்பாக கட்டுப்படுத்த கற்றிருக்க வேண்டும்.

அமெரிக்க மேஜிக் நிபுணரான டேவிட் ப்ளெய்ன் உள்ளிட்ட ஒரு சிலர் உலகளவில், மேற்படி வாட்டர் ஸ்போட்டிங் உத்தியை நிகழ்த்துவதில் பிரபலமானவர்கள். ஆனால் அவர்களை தூக்கிச் சாப்பிடும் வகையில் சீனாவைச் சேர்ந்த மா ஹூய் தற்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in