16 சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல்... காப்பக பொறுப்பாளருக்கு 707 ஆண்டுகள் சிறை!

மத்தேயு ஜாக்ரெஸ்கி
மத்தேயு ஜாக்ரெஸ்கி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சிறுவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஊழியர் ஒருவருக்கு 707 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள குழந்தைகள் காப்பகம்  ஒன்று மிகப் புகழ்பெற்றதாகும். அதன் பொறுப்பாளராக பணிபுரிந்தவர் மத்தேயு ஜாக்ரெஸ்கி (34). இவர் குழந்தைகளை பராமரிப்பதில் சிறந்தவர் என்று பெயர் பெற்றிருந்தார். அதனால் இவரை நம்பி நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு பணிக்கு சென்று வருவார்கள். 

இந்தநிலையில், கடந்த 2019 மே மாதத்தில்  8 வயது சிறுவன்  ஒருவனிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக அவனது  பெற்றோர், மத்தேயு ஜாக்ரெஸ்கி மீது போலீஸில் புகார் அளித்தனர். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மத்தேயு   ஜாக்ரெஸ்கியால்  2014 முதல் தெற்கு கலிபோர்னியா முழுவதும் 16 சிறார்கள் சீரழிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்தது. தமது பொறுப்பில் விடப்பட்ட சிறார்களில் 16 பேர்களை பாலியல் துன்பறுத்தலுக்கு ஆளாக்கியதுடன் ஆபாச காட்சிகளை காணொளியாக பதிவும் செய்துள்ளார்.

நீதிமன்றத்தில் மத்தேயு ஜாக்ரெஸ்கி
நீதிமன்றத்தில் மத்தேயு ஜாக்ரெஸ்கி

இதையடுத்து அவர் மீது 34 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருந்தது. 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 2 முதல் 14 வயதுடைய சிறார்களை அவர் சீரழித்துள்ளதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளதுடன், வேலியே பயிரை மேய்ந்த நிலை என்றார். அத்துடன் குற்றவாளிக்கு 707 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஆனால் நடந்த சம்பவத்திற்கு வருந்துவதற்குப் பதிலாக நீதிமன்றத்தில் மத்தேயு ஜாக்ரெஸ்கி,  "உங்கள் பிள்ளைகள் முகத்தில் புன்னகையை வரவழைக்க நான் முயன்றேன், நாங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்து நல்ல நேரங்களும் 100 சதவீதம் உண்மையானவை என குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்க தவறிய   ஜாக்ரெஸ்கி தான் உண்மையாக நடந்துகொண்டதாக மட்டுமே தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in