'நான் பெரிய தவறு செய்து விட்டேன் ': போட்டோ ஷூட்டால் நாட்டைவிட்டு துரத்தப்பட்ட பிரபலம்!

'நான் பெரிய தவறு செய்து விட்டேன் ': போட்டோ ஷூட்டால் நாட்டைவிட்டு துரத்தப்பட்ட பிரபலம்!

ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான அலீனா பஸ்லீவா, இந்தோனேஷியாவில் 700 ஆண்டு பழமையான மரத்தைத் தழுவுவது போல நிர்வாண போட்டோ ஷூட் செய்த காரணத்தால் தீவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் அலீனா பஸ்லீவா. யோகா ஆசிரியையான இவர் இன்ஸ்டாகிராம் பிரபலமாவார். இவர் தனது கணவருடன் இந்தோனேஷிய தீவுகளுக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள பாலி தீவில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், மரங்கள் ஆகியவற்றை தம்பதியர் ஆர்வத்துடன் கண்டு களித்துள்ளனர்.

அங்குள்ள தெபனான் மாவட்டத்தில் பாபாகானில் இந்து கோயில் உள்ளது. இதன் வளாகத்தில் 700 ஆண்டு பழமையான ஆலமரம் உள்ளது. இதை அந்த ஊர் மக்கள் புனிதமாக கருதுகிறார்கள். இந்த நிலையில், அலீனா அந்த மரத்தைத் தழுவிக்கொண்டு நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதை அவர் இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டார். மே 4-ம் தேதி இந்த புகைப்படம் வைரலானது.

இந்த பதிவைப் பார்த்த பாலியைச் சேர்ந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பாலி மக்கள் இயற்கையைத் தெய்வமாக வணங்குபவர்கள். இதன் காரணமாக, அலீனாவும் அவரது கணவரும் உடனடியாக பாலித் தீவில் இருந்து அதிகாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் இருவரும் இந்தோனேஷியாவில் நுழைய ஆறு மாதம் தடையும் விதிக்கப்பட்டது. அத்துடன் உள்ளூர் மக்கள் புனிதமாகக் கருதும் அந்த இடத்தை தூய்மை செய்யும் பணியில் இவர்கள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய செயலுக்கு அலீனா பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தான் பெரிய தவறு செய்து விட்டதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அலீனா கூறுகையில்," ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு புனிதமான நம்பிக்கை இருக்கும். எனக்கு அது தெரியாத காரணத்தால் இந்த தவறு நடந்து விட்டது. மக்களின் நம்பிக்கையை மதிப்பது மிகவும் முக்கியம்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.