குற்றவாளிகளின் புகலிடமாக மாறாமல் செயல்பட வேண்டும்; கனடாவுக்கு இந்தியா அறிவுறுத்தல்!

இந்தியா கனடா
இந்தியா கனடா

கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக இந்தியா நிறுத்தியுள்ளது. மேலும், இந்தியாவுக்கு எதிராக குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கனடா நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கனடாவில் சுர்ரே பகுதியை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். கனடாவின் குடிமகன் அந்தஸ்து பெற்றவரான அவர், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்தியா கனடா
இந்தியா கனடா

இதனால், இரு நாடுகளும் அந்தந்த நாடுகளின் தூதர்களை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கனடாவின் வின்னிபக் என்ற பகுதியில் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி இன்று சுட்டு கொல்லப்பட்டார். சுக்தூல் சிங் என்ற அந்த காலிஸ்தான் பயங்கரவாதி 2 கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார். அவர், 2017-ம் ஆண்டு கனடாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

மோடி ஜஸ்டின்
மோடி ஜஸ்டின்

கனடா நாட்டுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், விசா வழங்கும் சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இதன்படி, அடுத்த உத்தரவு வரும்வரை இந்த சேவை நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், கனடா தனது நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “இந்தியாவுக்கு எதிராக குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கனடாவில் இருந்து குற்றச்செயலில் ஈடுபடுவோர் பற்றி கனடா அரசுக்கு ஆதாரம் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஹர்தீப் சிங் நிஜார் வழக்கில் எந்த தகவல்களையும் கனடா இந்தியாவுக்கு வழங்கவில்லை. கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

குற்றவாளிகளின் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் கனடா அரசு செயல்பட வேண்டும். கனடாவிலுள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்நாட்டின் பொறுப்பாகும். அரசியல் காரணங்களுக்காக இந்தியா மீது குற்றச்சாட்டுகளை கனடா முன்வைக்கிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in