44 நாட்களில் பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் லிஸ் டிரஸ்!

லிஸ் ட்ரஸ்
லிஸ் ட்ரஸ்

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார்.

இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக லிஸ் டிரஸ் பதவி ஏற்று 44 நாட்கள் தான் ஆகிறது. பிரிட்டன் வரலாற்றிலேயே இவ்வளவு குறுகிய காலம் பிரதமராக இருந்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜினாமா குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே பேசிய லிஸ் டிரஸ், தான் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிலிருந்து விலகுவது குறித்து அரசர் சார்லஸிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

பிரதமர் லிஸ் டிரஸின் ராஜினாமா காரணமாக பிரிட்டன் அரசியலில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இனியும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பதவியில் தொடர உரிமை இல்லை என்றும், உடனடியாக நாட்டில் பொது தேர்தலை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in