கால்களை இழந்த காதலி... மார்போடு அணைத்து கரம்பிடித்த காதலன்: கண்கலங்க வைத்த உக்ரைன் போர்

கால்களை இழந்த காதலி... மார்போடு அணைத்து கரம்பிடித்த காதலன்: கண்கலங்க வைத்த உக்ரைன் போர்

போர் என்ற கொடூரத்தால் உக்ரைன் நாட்டையே அழித்துவிட்டது ரஷ்யா. லட்சக்கணக்கானோர் மாண்டு போனார்கள். ஆயிரக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழந்துவிட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கண்ணிவெடியில் சிக்கி உக்ரைன் நாட்டு செவிலியர் ஒருவர் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்துவிட்டார். தன் காதலி கால்களை இழந்துவிட்டாலும் அவரை மார்போடு அணைத்து கரம் பிடித்துள்ளார் காதலன்.

உக்ரைனை சேர்ந்தவர் செவிலியர் ஒக்ஸானா. 23 வயதான இவர், தனது காதலன் விக்டருடன் கடந்த மார்ச் 27-ம் தேதி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ரஷ்ய படைகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் ஒக்ஸானா சிக்கினார். அதே நேரத்தில் ஒக்ஸானாவின் எச்சரிக்கையால் காதலன் விக்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

தனது இரண்டு கால்களையும் இழந்த ஒக்ஸானா, லிவிங் நகரில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, மருத்துவமனையிலேயே ஒக்ஸானாவை திருமணம் செய்து கொண்டார் காதலன் விக்டர். அப்போது, மனைவி ஒக்ஸானாவை தனது தோளில் சுமந்தபடி விக்டர் நடனமாடிய காட்சி காண்போரை கண்கலங்க வைத்துவிட்டது. அனைவரும் கைத்தட்டி அவர்களை வாழ்த்தினர். அவர்களுக்கு ஒக்ஸானா நன்றி தெரிவித்துக் கொண்டார். மேல் சிகிச்சைக்காக தனது காதல் கணவருடன் ஜெர்மனி செல்கிறார் ஒக்ஸானா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in