அடுத்தடுத்த பயங்கர விபத்து... போயிங் விமான தயாரிப்பு அதிகாரி ராஜினாமா!

போயிங் தலைமை செயல் அதிகாரி டேவ் கால்ஹவுன்
போயிங் தலைமை செயல் அதிகாரி டேவ் கால்ஹவுன்

அண்மையில் நடந்த விரும்பத்தகாத செயல்களுக்கு பொறுப்பேற்று போயிங் விமான தயாரிப்பு  நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேவ் கால்ஹவுன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அலாஸ்கா  ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானம், போலந்திலிருந்து புறப்பட்ட 10 நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இதுபோன்ற ஒரு சில விபத்துக்கள் தொடர்ந்து நடந்ததால் இதற்கு பொறுப்பேற்று அந்த நிறுவனத்தின் சிஇஓ டேவ் கால்ஹவுன் தனது பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

"அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது போயிங் நிறுவனத்தின் மிகுந்த துயரம் மிகுந்த சம்பவமாக மாறியது தாங்கள் அனைவரும் அறிந்ததுதான். இந்த விபத்து தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன் தொடர்ந்து பதிலளித்து வருகிறோம். நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்து வருகிறோம்.

போயிங் தலைமை செயல் அதிகாரி டேவ் கால்ஹவுன்
போயிங் தலைமை செயல் அதிகாரி டேவ் கால்ஹவுன்

உலகத்தின் பார்வையே போயிங் மீது உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இந்த கடினமான சூழலிலிருந்து சிறந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை நாங்கள் வழங்குவோம். மேலும், இந்த ஆண்டுடன் போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலக உள்ளேன்.  தகுதியாக நபரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.

அவரது விலகல் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் இந்த ஆண்டு இறுதிவரை அவர் பணியில் இருந்து தேவையான முன்னேற்பாடுகளையும், நிறுவனத்திற்கு தேவையான தகுந்த ஆலோசனைகளையும், மாற்று ஏற்பாடுகளையும் செய்து வைப்பார் என்பதால் அது அந்நிறுவனத்திற்கு ஆறுதல் அளித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in