ரஷ்யாவுக்கு மேலும் ஒரு 'இடி'; போயிங் அதிரடி

ரஷ்யாவுக்கு மேலும் ஒரு 'இடி'; போயிங் அதிரடி

“ரஷ்ய விமான நிறுவனங்களுக்கான பாகங்கள், பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு சேவைகளை நிறுத்தி வைக்கிறோம்" என்று அமெரிக்க விமான நிறுவனமான போயிங் அதிரடியாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் இன்று 7வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், எதையும் கேட்காமல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது ரஷ்யா. இதனிடையே, ரஷ்யா- உக்ரைன் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளன. இதில் சுமுக தீர்வு காணப்பட வேண்டும் என்பதே பல நாடுகளின் விருப்பமாக இருக்கிறது.

உக்ரைன் மீதான இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, ஐரோப்பிய நட்பு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பார் என்று தகவல் வெளியானதை அடுத்து அமெரிக்க விமான நிறுவனமான போயிங், ரஷ்ய விமான நிறுவனங்களுக்கான தனது ஆதரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து போயிங் செய்தித் தொடர்பாளர், “ரஷ்ய விமான நிறுவனங்களுக்கான பாகங்கள், பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு சேவைகளையும் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம். மோதல் தொடர்வதால், ரஷ்யாவில் உள்ள எங்கள் அணி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எங்கள் குழுக்கள் கவனம் செலுத்துகின்றன. மேலும் உக்ரைன் தலைநகர் கியேவில் உள்ள எங்கள் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.