இரவை பகலாக்கிய விண்கல்... ஸ்பெயின், போர்ச்சுகல் நிகழ்வின் வாய் பிளக்க வைக்கும் வீடியோ!

 வானில் நீல நிறத்தில் ஒளிரச் செய்த கடந்து விண்கல்
வானில் நீல நிறத்தில் ஒளிரச் செய்த கடந்து விண்கல்

இரவை பகலாக்கும் வகையில் நீல ஒளிப் பிரவாகத்துடன் ஸ்பெயின், போர்ச்சுகல் வானில் ராட்சத விண்கல் கடந்து சென்றதாக கூறப்படும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளுக்கு இடையேயான வானில் ஒரு நீல விண்கல் கடந்து செல்வது போன்றும், அந்த விண்கல்லிலிருந்து திடீரென ஒளிப் பிரவாகம் வந்து இரவை பகல் போன்று பிரகாசித்ததுமான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனை காரில் கடந்த சிலர் பார்வையில் பதிவான வகையில் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

பிரகாசமான நீல ஒளி வானத்தில் எரிந்ததால், இரு நாடுகளிலும் உள்ள மக்கள் நம்பமுடியாத இந்த நிகழ்வை தங்கள் மொபைல் போன்களில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சியை காண்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது.

விண்கல் ஒளிப்பிரவாக வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தாங்கள் வியந்த சம்பவத்தின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு சமூக வலைதள பதிவர் வெளியிட்ட பதிவில், “உண்மையற்றது!! போர்ச்சுகல் மீது பெரிய விண்கல் ஒளி! இப்படி ஒரு ஒளியை பார்ப்பது வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு! இது பூமியைத் தாக்கிய விண்கல்லாக மாறியதா என்பது குறித்து தெரியவில்லை. நூற்றுக்கணக்கான மைல்களுக்கு தெரிந்தது. ஆஹா!” என வியப்பின் உச்சத்துக்கே சென்று பதிவிட்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான கி.மீ. வரை இரவு நேர வானில் நீல நிற ஒளி பிரவாகம் பாய்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், இது பூமியின் மேற்பரப்பைத் தாக்கியதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இது போர்ச்சுகலின் காஸ்ட்ரோ டெய்ர் நகருக்கு அருகில் விழுந்திருக்கலாம் எனவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கூற்றுப்படி, "விண்கற்கள் அல்லது விண்வெளிப் பாறைகள் என்பது விண்வெளியில் உள்ள பொருட்களாகும். அவை தூசிகள் முதல் சிறிய சிறுகோள்கள் வரை இருக்கும். இவை அதிக வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது தீப்பற்றி எரிவதால் விண்கற்கள் என அழைக்கப்படுகின்றன” என தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in