
எதிர்க்கட்சியினர் போனை ஒட்டுக்கேட்க மென்பொருளை தந்ததால் இஸ்ரேலை பாஜக ஆதரிப்பதாக சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மின்னணு வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யும் தொழில்நுட்பத்தை கொடுத்ததற்காகவும், எதிர்க்கட்சியினர் போனை ஒட்டுக்கேட்க மென்பொருளை தந்ததற்காகவும் இஸ்ரேலுக்கு பாஜக ஆதரவு தெரிவித்து வருவதாக சிவசேனா(உத்தவ் பிரிவு) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். உலகின் என்ன நடக்கிறது என்பதே தேவேந்திர பட்னாவிசுக்கும், ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கும் தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.