உலக பணக்கார பட்டியலில் வியப்பு! பில்கேட்ஸுக்கு 4வது இடம்... அவரது உதவியாளருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஸ்டீவ் பால்மர்
ஸ்டீவ் பால்மர்

உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 4வது இடத்தில் உள்ள நிலையில் அவரது முன்னாள் உதவியாளர் ஸ்டீவ் பால்மர், 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது உலகத்தினரை  ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பல அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ப்ளூம்பெர்க் பில்லியனர்களின்  தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலக பணக்காரர்களின் வரிசையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 4வது இடத்தில் உள்ள நிலையில் அவரிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டீவ் பால்மர் 5வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த  பட்டியலில் முதலிடத்தில் ட்விட்டர் உரிமையாளரான எலான் மஸ்க் 193 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் LVMH Moet Hennessy - Louis Vuitton தலைவரும், சிஇஓவுமான பெர்னார்ட் அர்னால்ட் 156 பில்லியன் அமெரிக்க டாலருடன் 2வது இடத்திலும், அமேசான் நிறுவனரும், சிஇஓவுமான ஜெஃப் பெசோஸ் 155 பில்லியன் அமெரிக்க டாலருடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

முதல் நான்கு  இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள்
முதல் நான்கு இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள்

இவர்களுக்கு அடுத்தப்படியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 122 பில்லியன் அமெரிக்கா டாலருடன் 4வது இடத்தில் உள்ளார். இதற்கு அடுத்தப்படியாக தான் பில்கேட்ஸிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டீவ் பால்மர் 5வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு என்பது 117 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதுதான் தற்போது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. 

ஏனென்றால் இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் இருப்பவர்கள் அனைவரும் சொந்தமான நிறுவனங்களை வைத்துள்ளனர். ஆனால் ஸ்டீவ் பால்மர் தனக்கென எந்த நிறுவனத்தையும் வைத்து கொள்ளாத நிலையில் 5வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார். அதோடு அவர் Oraccle சாப்ட்வேர் நிறுவனத்தின் இணை நிறுவனரான லாரி எலிசன், வாரன் பஃபெட், மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்டவர்களை விட முந்தியுள்ளார். அதாவது ஸ்டீவ் பால்மரை ஒப்பிடும்போது லாரி எலிசன் 114 பில்லியன் அமெரிக்க டாலருடன் 6வது இடத்திலும், வாரன் பஃபெட் 113 பில்லியன் அமெரிக்கா டாலருடன் 7 வது இடத்திலும், ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் 110 பில்லியன் அமெரிக்கா டாலருடன் 8வது இடத்திலும் உள்ளனர்.

ஸ்டீவ் பால்மர் 1980 ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அப்போது அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் முக்கிய நபராக அறியப்பட்டார். அந்த நிறுவனத்தில் முக்கிய 30 நபர்களில் இவரும் ஒருவரானார். விண்டோஸ், எம்எஸ் ஆபிஸ் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளில் இவர் முக்கிய பங்காற்றினார்.

2000ல் அவர் மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படத் தொடங்கினார். அவரது தலைமையின் கீழ், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 7 மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தொகுப்பு உள்ளிட்ட முக்கிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்தது. அவரது பதவிக்காலத்தில் மைக்ரோசாஃப்ட் புதிய உச்சம் தொட்டது. மேலும் கேமிங் துறையில் நுழைவதற்கான அடித்தளத்தையும் அவர் செய்தார். இதற்காக எக்ஸ்பாக்ஸ் கேமிங் கண்சோல் அறிமுகம் செய்தார்.

ஸ்டீவ் பால்மர்
ஸ்டீவ் பால்மர்

அதன்பிறகு 2014ல் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து அவர் வெளியேறினார். தற்போது அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கிளிப்பர்ஸ் நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளார்.  கடந்த ஆண்டில் ஸ்டீவ் பால்மரின் முதலீடுகள் மீதான லாபம் என்பது கிடுகிடுவென அதிகரித்தது. ஆண்டின் தொடக்கத்தில் அவர் 30 பில்லியனுக்கு அதிகமான அமெரிக்க டாலர்களை பெற்றார். இது அவரை உலக பணக்காரர்களின் பட்டியலில் முன்னேற்றமடைய செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in