பகீர் வீடியோ! இஸ்ரேல் போரின் கொடூரம்... தரைமட்டமாகும் காசா!

காசா மீதான் இஸ்ரேல் தாக்குதல்
காசா மீதான் இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், காசா தரைமட்டமாகி வருவதை சித்தரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காசாவின் துயரம் மட்டுமன்றி, போர் என்பதன் கொடூரத்தையும் இந்த வீடியோ பதிவு செய்திருக்கிறது.

அக்.7 இஸ்ரேல் மீதா ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது தீவிரமான பதிலடியை தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்த இஸ்ரேல் தாக்குதலில், காசாவின் அப்பாவி மக்களும் கொலையுண்டு வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் என, பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு எதிரான போருக்கும் சற்றும் தொடர்பில்லாத பொதுமக்களே, இஸ்ரேல் தாக்குதலில் அதிகம் பலியாகி வருகின்றனர்.

‘போரை தொடங்கி வைத்தது நாங்கள் அல்ல; ஹமாஸ் பயங்கரவாதிகள் தான். அவர்களை பூண்டோடு அழிக்கும் வரை இஸ்ரேல் படைகள் ஓயாது’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடமாக அறிவித்திருக்கிறார். இதனால் சர்வதேச சமூகத்தின் கண்டனத்தையும் மீறி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் நிலம், வான் என சகல வழிகளிலும் காசாவை குறிவைத்துள்ளன.

இதற்கிடையே இஸ்ரேல் தாக்குதல் காரணமாக கொல்லப்படும் காசா மக்களின் பரிதாபம் குறித்தும், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தை கலங்கடித்து வருகின்றன. காசா மீண்டு எழாத வகையில் இஸ்ரேல் போர் விமானங்கள் தீவிரம் காட்டியதில், பல லட்சம் மக்கள் வசித்த ஒரு நகரமே தரைமட்டமாகி வருகிறது. இவற்றை சித்தரிக்கும் வகையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு முன் - பின் என காசாவை ஒரே பதிவாக அடக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் என்பதற்கும் அப்பால், போர் என்பதன் கொடூரத்தை பதிவு செய்த வகையிலும் அந்த வீடியோ தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளான உக்ரைன் தேசத்தை, தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆளான காசாவின் பாதிப்புகள் உலக மக்களை உலுக்கி வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in