அதிபர் தேர்தலில் மீண்டும் ராஜபக்ச குடும்பம்! பசில் ராஜபக்ச களமிறங்குகிறார்!

பசில் ராஜபக்ச
பசில் ராஜபக்ச

இலங்கையில் அடுத்த ஆண்டு  நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச களமிறங்கவுள்ளதாக அந்த கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பசில் ராஜபக்ச
பசில் ராஜபக்ச

இலங்கையில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களும் நடைபெறும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான முடிவுகளை மேற்கொண்டு வருகின்றன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளர் தொடர்பாக  பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. கட்சியின் சில உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். ஆனால்  கட்சி  என்ற வகையில் இது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

ராஜபக்ச குடும்பம்
ராஜபக்ச குடும்பம்

இந்த நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் பட்டியலில் தற்போது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த அதிபர் தேர்தலுக்கான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறக்கப்படலாமென கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பை கட்சி விரைவில் மேற்கொள்ளுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 17ம் தேதிக்கு முன்னர் இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,  இல்லாவிட்டால்  மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கி போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என  மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in