ரூ.1 கோடி செலுத்தினால் ஜாமீன்: தமிழக மீனவர்களை பதறவைத்த இலங்கை நீதிபதி

ரூ.1 கோடி செலுத்தினால் ஜாமீன்: தமிழக மீனவர்களை பதறவைத்த இலங்கை நீதிபதி

தமிழக மீனவர்கள் ஜாமீனில் செல்ல வேண்டுமானால் ரூ.1 கோடி பிணைத் தொகை செலுத்த வேண்டும் என இலங்கை நீதிமன்றம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் 24-ம் தேதி தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 12 பேரையும் ஏப்ரல் 7-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சிறைக் காவல் முடிந்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட 12 மீனவர்களை மே 12-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, மீனவர்கள் ஜாமீனில் செல்ல வேண்டுமென்றால் ஒரு மீனவருக்கு தலா ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று கூறினார். நீதிபதியின் இந்த உத்தரவு தமிழக மீனவர்களை அதிரவைத்துள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in