இஸ்ரேல் யுத்தம்- அன்றே கணித்த பாபா வாங்கா!
எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை 500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாஸ்டர்டாமஸ் கணித்து கூறியதாக இன்றும் பலர் கூறுகின்றனர். அந்த வரிசையில் ஒருவராக அறியப்படுவர் தான் பாபா வாங்கா. அவரது கணிப்பு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலகப்போர் மூளும் என அவர் கணித்திருந்தது போலவே இஸ்ரேல் போர் தொடங்கியுள்ளதாக நம்புகின்றனர்.
ஏற்கெனவே இவரது கணிப்புப்படி இரட்டை கோபு தாக்குதல், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு, சோவியத் யூனியன் வீழ்ச்சி உள்ளிட்ட விஷயங்களை பாபா வாங்கா துல்லியமாக கணித்துள்ளதாக அவரை பின் தொடர்பவர்கள் கூறுகிறார்கள்.

அவர் 2023ம் ஆண்டு உலக போர் மூளும் என்றும், அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்றும் கணித்துள்ளார். அதே போன்று தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியுள்ளது என்று அவரை பின் தொடர்பவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த போரால் உலக நாடுகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து போக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே பலரும் கூறுகின்றனர். இது அடுத்த மூன்றாம் உலகப் போருக்கும் கூட வழிவகுக்க வாய்ப்பு இருக்கிறது. உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. ஓரிரு நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்தது. மற்ற நாடுகள் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால் இஸ்ரேல் போரில் அப்படி இல்லை.

ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது. அதேநேரம் அரபு நாடுகள், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. போர் தொடரும்பட்சத்தில் அதில் மற்ற நாடுகள் உள்ளே வரலாம். குறிப்பாக இஸ்ரேல் நாட்டில் அமெரிக்கர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் நிச்சயம் அமெரிக்கா உள்ளே வரும். ஒரு வல்லரசு நாடு உள்ளே வந்தால் இது அடுத்த உலகப் போரை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் என்பது வல்லுநர்கள் கருத்து. அதேபோல போர் என்று வந்துவிட்டால் அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தவும் வாய்ப்புகள் மிக அதிகம். இதன் காரணமாகவே எங்குப் பாபா வாங்காவின் கணிப்புகள் உண்மையாகிவிடுமோ என்று பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.