ஜெர்மனி பெண் அமைச்சருக்கு திடீர் முத்தம் - குரோஷிய அமைச்சரின் செயலால் பரபரப்பு!

ஜெர்மனி பெண் அமைச்சருக்கு திடீர் முத்தம் - குரோஷிய அமைச்சரின் செயலால் பரபரப்பு!

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் அந்நாட்டு பெண் அமைச்சரை குரோஷியா வெளியுறவு அமைச்சர் திடீரென முத்தமிட்ட நிகழ்வு சலசலப்பையும், கடும் விமர்சனத்தையும் கிளப்பியது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளில் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு பெர்லின் நகரில் நடைபெற்றது. மாநாடு முடிந்து குழு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக அமைச்சர்கள் ஓரிடத்தில் கூடினர்.

அப்போது வரிசையில் நிற்க வந்த ஜெர்மானிய வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் அன்னாலெனா பேர்பாக்கை குரோஷியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கார்டன் கிர்லிக் ராட்மேன் கைகுலுக்கி எதிர்பாராத விதமாக முத்தமிட்டார். தனது ஒப்புதல் இல்லாமல் எதிர்பாராத நேரத்தில் அத்துமீறி தரப்பட்ட முத்தத்தால் பெண் அமைச்சர் அன்னாலெனா நெளிந்தார்.

இதை பார்த்த சக அமைச்சர்கள் குரோஷியா அமைச்சரின் இந்த செயல் மிகவும் அருவருப்பானது என்றும் சாடினர். இந்த விவகாரம் தொடர்பாக குரோஷியாவின் முன்னாள் பிரதமர் ஜத்ரங்கா கோசோர், ராட்மேனை விமர்சித்தார். அவர் தனது எக்ஸ் பதிவில், "பெண்களை வலுக்கட்டாயமாக முத்தமிடுவது வன்முறை என்று அழைக்கப்படுகிறது இல்லையா?" என தெரிவித்தார். மேலும் பலரும் இதற்கு அதிருப்தி தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து தனது செயலுக்கு குரோஷியா அமைச்சர் மன்னிப்பு கோரினார். இதுகுறித்து பேசிய ராட்மேன், “இது ஒரு சங்கடமான தருணம். நாங்கள் அமைச்சர்கள் எப்போதும் ஒருவரையொருவர் மனதார வாழ்த்துகிறோம். அதை யாரேனும் தவறாகப் பார்த்திருந்தால், அப்படி எடுத்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். விமானம் தாமதமானது, அதனால் நாங்கள் ஒருவரையொருவர் கூட்டு புகைப்படத்தில் மட்டுமே பார்த்தோம். எனவே யார் இதை எப்படி எடுத்துக் கொண்டார்கள் என எனக்குத் தெரியாது. நாங்கள் அண்டை நாடுகளாக இருக்கிறோம். இது ஒரு நல்ல மாநாடு" என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in