ராணுவ தளபதி பட்டம் பெற்ற பென்குயின் பறவை; எந்த நாட்டில் தெரியுமா?

ராணுவ தளபதி பட்டம் பெற்ற பென்குயின் பறவை; எந்த நாட்டில் தெரியுமா?

ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் மிருகக்காட்சி சாலையில் ஒரு பிரபலமான பென்குயின், ராணுவ தளபதியாக பதவி வழங்கப்பட்டதன் மூலம் உலகின் மிக உயர்ந்த விலங்காக உயர்த்தப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

பென்குயின்
பென்குயின்

ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் பென்குயின் பறவை ராணுவ தளபதியாக பொறுப்பேற்கும் விழா அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் சார் நில்ஸ் ஓலவ் 3 என்ற ராஜா வகை பென்குயின், தற்போது அந்நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.  இந்த பென்குயினுக்கு மிக உயரிய கௌரவம் அளிக்கப்பட்டது.

தளபதி பட்டம் சூட்டப்பட்டுள்ள பென்குயின் பறவை, இதற்கு முன்பாக ராணுவத்தில் பல பொறுப்புகளை வெவ்வேறு காலகட்டங்களில் செய்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவும், பதவி உயர்வு அளிக்கும் வகையிலும் தற்போது தளபதி பட்டம் சூட்டப்பட்டது.

கின்னஸ் சாதனை
கின்னஸ் சாதனை

இதை கௌரவிக்கும் முகமாக கின்னஸ் உலக சாதனைப் பதிப்பாசிரியர் கிரெய்க் க்ளெண்டே செப்டம்பர் 29 அன்று எடின்பர்க் உயிரியல் பூங்காவிற்குச் சென்று, உயிரியல் பூங்காவின் பென்குயின் பராமரிப்பு குழுவிற்கு உலக சாதனைப் பட்டத்தை வழங்கியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in