போராட்டத்தில் குதித்த 46,000 கார் தொழிலாளர்கள்... 50 சதவீத உற்பத்தி இழப்பு: முடிவுக்கு வரும் ஸ்டிரைக்

அமெரிக்காவில் கார் நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
அமெரிக்காவில் கார் நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அமெரிக்காவில் கார் நிறுவன தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து, 25 சதவீத ஊதிய உயர்வுக்கு கார் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதால் விரைவில் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட வேண்டிய ஊதியத்தை 6 ஆண்டுகளாக உயர்த்தாது, ஆலை மூடலுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி, கூடுதல் தொழிலாளர் பணப்பலங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அமெரிக்காவில் கடந்த 1ம் தேதி முதல் ஒரு மாத காலமாக, கார் உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்களில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பிக் 3 என்று அழைக்கப்படும், போர்ட், ஸ்டெலாண்டிஸ், ஜெனரெல் மோட்டார்ஸ் ஆகிய 3 நிறுவனங்களில் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 50 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்க கோரி போராட்டம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்க கோரி போராட்டம்

இந்த போராட்டத்திற்கு அமெரிக்க அதிபர் பைடனும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், போர்ட் மற்றும் ஸ்டெலாண்டிஸ் நிறுவனங்கள் ஐக்கிய ஆட்டோ தொழிலாளர்கள் எனப்படும் யு.ஏ.டபிள்யூ தொழிலாளர் சங்கத்துடன் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, தற்காலிக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 40 சதவீத ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை போன்ற முடிவுகள் எட்டப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் ஒப்புதலால் போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்பு
நிறுவனங்களின் ஒப்புதலால் போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்பு

இந்நிலையில் ஜெனரெல் மோட்டார்ஸ் நிறுவனமும் தீர்வு உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டுள்ளதால், விரைவில் போராட்டம் முடிவுக்கு வந்து, கார் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முழு வெற்றி அல்ல என்ற போதும், அடுத்த முறை பேச்சுவார்த்தைக்கு அமரும் போது, தொழிற்சங்கங்கள் இல்லாத டெஸ்லா, டொயோட்டா, ஹோண்டா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளதாக தொழிலாளர் அமைப்பின் தலைவர் ஷான் ஃபெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in