
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கால்பந்தய வீராங்கனை சாலையில் சென்று கொண்டிருந்தபோது நடந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான இண்டிகா தலைநகர் இண்டியானாபோலிஸ் பகுதியில் வசித்து வந்தவர் ஆஷ்லியா ஆல்பர்ஸன்(24). பிரபல கார் பந்தய வீராங்கனையான இவர் தன் 10 வயதிலிருந்தே கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டு டி.கியூ மிட்ஜெட் வகைக் கார்களை ஓட்டுவதில் திறமைசாலியாக இருந்து வந்தார். பல்வேறு பந்தயங்களில் கலந்து கொண்டு கோப்பைகளில் வென்று இருக்கிறார்.
இவர், நேற்று ஜிஎம்சி டைரைன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் அவரது நண்பர் ஒருவர் வேறு காரில் பயணித்துக் கொண்டிருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டே சென்றனர். ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு செல்லும்போது, ஜிஎம்சி சென்ற பாதையில் திடீரென வேறு ஒரு கார் குறுக்கே வந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆஷ்லியா உடனடியாக பிரேக் இயக்கி தனது காரை நிறுத்த முயன்றார். ஆனால் பயனில்லாமல் ஜிஎம்சி கார் கட்டுப்பாட்டை இழந்து குறுக்கே வந்த அந்த காரின் மீது பயங்கரமாக மோதியது. இதில், ஆஷ்லியா படுகாயமடைந்தார். அங்கு விரைந்து வந்த போலீஸார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கார் ரேஸ் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.