
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, நவராத்திரி விழாவில் கர்பா நடனமாடிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, டெல்லியில் உள்ள சித்திரஞ்சன் பூங்கா பகுதியில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பங்கேற்றார். அப்போது இந்தியர்களுடன் அவர் கர்பா நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து கொல்கத்தாவின் பிரபல சாலையோர உணவுகள் குறித்த கண்காட்சியில் பங்கேற்ற அவர், இந்திய உணவுகளை ருசித்துப் பார்த்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்செட்டிக்கு, இந்திய முறைப்படி நெற்றியில் திலகமிட்டும், ஆரத்தி எடுத்தும் பெண்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து குழந்தைகளுடன் மேடையில் நடனமாடிய எரிக், இந்தியர்களைப் போலவே மண்ணால் செய்யப்பட்ட சிறிய வகை பானையை வாயில் வைத்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த வீடியோ காட்சிகள் அடங்கிய தொகுப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள எரிக், இந்தியாவின் பல்வேறு விதமான கொண்டாட்டங்கள் மற்றும் விழாக்களில் பங்கு கொண்டு அவர்களின் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!
பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!
அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!
அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!