வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்

அமெரிக்கா அதிர்ச்சி... அதிகளவில் அணு ஆயுதங்களை தயாரிக்க வடகொரியா திட்டம்!

அணு ஆயுதங்களை அதிகப்படியான எண்ணிக்கையில் தயாரிப்பதற்காக அணுஆயுதக்கொள்கையில் வடகொரியா திருத்தம் செய்திருப்பது அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

ரப்பர் ஸ்டாம்ப் நாடாளுமன்றம் என்று வர்ணிக்கப்படும் வடகொரிய நாடாளுமன்றத்திற்கான உச்ச மக்கள் சபையில் 14வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அணு ஆயுத கொள்கையில் திருத்தும் செய்வதற்கான மசோதா முன்வைக்கப்பட்டு அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர்.

அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் விதமாக அணு கொள்கைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தனது படைகள் மூலம் போர் ஒத்திகைகளை நடத்தி தங்களுக்கு அமெரிக்கா ஆத்திரமூட்டுவது எல்லையை மீறி போவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய அணுக்கொள்கை திருத்தம் மூலம் அதிகப்படியாக அணுஆயுதங்களை அந்தநாடு உற்பத்தி செய்யும் கடந்த 2003ம் ஆண்டு அணு ஆயுதபரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய வடகொரியா 2006ம் ஆண்டு முதல் இதுவரை 5க்கும் மேற்பட்ட முறை அணுஆயுத சோதனை நடத்தியுள்ளது. இதற்கிடையே தென்கொரியாவிற்கு ஆதரவாக 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின் அணுஆயுத நீர் மூழ்கி கப்பல் வடகொரியா அருகே நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா தற்போது அணு ஆயுத கொள்கையில் திருத்தம் செய்திருப்பது அமெரிக்கா வடகொரியா இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in