ரூ.659 கோடியில் காதலிக்காக வாங்கிய வசந்த மாளிகை... அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அதிரடி!

காதலியுடன் ஜெஃப் பெசோஸ்
காதலியுடன் ஜெஃப் பெசோஸ்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தனது காதலிக்கான மற்றுமொரு பரிசாக, அமெரிக்காவின் கோடீஸ்வரத் தீவு ஒன்றில் ரூ.659 கோடியில் மாளிகை ஒன்றினை வாங்கியுள்ளார்.

அமேசான் நிறுவனரும், உலகின் மூன்றாவது பணக்காரருமான, ஜெஃப் பெசோஸ் தனது 59 வயதில் காதலில் உருகி மருகி வருகிறார். நீண்டகால காதலியும் வருங்கால மனைவியுமான -லாரன் சான்செஸ்க்காக, கடந்த வாரம் இவர் வாங்கிய ரூ659 கோடி மதிப்பிலான வசந்த மாளிகை, உலகின் இதர கோடீஸ்வரர்கள் காதுகளில் புகைவரச் செய்திருக்கிறது.

இந்தியன் க்ரீக் தீவு
இந்தியன் க்ரீக் தீவு

புளோரிடா அருகே கோடீஸ்வரர்களுக்கு மட்டுமேயான தீவு ஒன்றில் இந்த வசந்த மாளிகையை ஜெஃப் நிர்மாணித்திருக்கிறார். இந்தியன் க்ரீக் தீவு என்று அழைக்கப்படும் மனிதரால் உருவாக்கப்பட்ட தடுப்புத் தீவில், ஜெஃபின் புதிய சொத்து 1.84 ஏக்கரை ஆக்கிரமித்துள்ளது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியன் க்ரீக் தீவின் மக்கள் தொகை வெறும் 81 மட்டுமே.

அமெரிக்க டாலர் மதிப்பில் 79 மில்லியன் டாலர் மதிப்பிலான ஜெஃபின் புதிய சொத்து, எற்கனவே அவர் அங்கு வாங்கியுள்ள 68 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மாளிகைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அமெரிக்க கோடீஸ்வர்களின் சொர்க்கபுரியான இந்த தீவில், டாம் பிராடி, இவான்கா டிரம்ப், ஜாரெட் குஷ்னர், நார்மன் பிரமன் உள்ளிட்டோர் இதர மாளிகைகளின் உரிமையாளர்கள் ஆவர்.

ஜெஃப் பெசோஸ் வாங்கியிருக்கும் புதிய மாளிகையில் அதி நவீன நீச்சல் குளம், திரையரங்கு, நூலகம், மது கொண்டாட்டத்துக்கான பாதாள அறை, பணிப்பெண்கள் தங்கும் அறைகள், ஆறு வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை அமைந்திருக்கின்றன.

ஜெஃப் பெசோஸ் வாங்கியிருக்கும் வசந்த மாளிகை
ஜெஃப் பெசோஸ் வாங்கியிருக்கும் வசந்த மாளிகை

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் தற்போது தனது அமேசான் ஆன்லைன் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளிவிட்டிருக்கும் ஜெஃப் பெசோஸ்க்கு, புளோரிடா மாளிகையையும் சற்றே தள்ளுபடியில் கிடைத்திருக்கிறது. சொத்தின் ஆரம்ப பட்டியல் விலையான $85 மில்லியனில் இருந்து 7.1% தள்ளுபடியில் தற்போது அதனை ஜெஃப் பெசோஸ் பெற்றுள்ளார்.

முன்னதாக காதலி லாரன் சான்செஸ்க்கு 2.5 மில்லியன் டாலர் மதிப்பிலான வைரத்தை பரிசளித்த ஒரே மாத இடைவெளியில், அடுத்த அதிரடியாக புதிய வசந்த மாளிகையை பெசோஸ் பரிசளித்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!

லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!

பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!

எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in