ஆட்குறைப்பு நடவடிக்கையில் அமேசான்... பணி நீக்க அறிவிப்பால் பதறும் ஊழியர்கள்!

அமேசான்
அமேசான்

பிரபல வர்த்தகத் தொழில் நிறுவனமான அமேசான் நிறுவனம் தனது  அலெக்ஸா பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. 

கொரோனா காலத்திற்குப் பின்னர் பிரபல நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஐ.டி நிறுவனங்கள் பெரும்பாலானவை தங்கள் ஊழியர்களின் குறிப்பிட்ட சதவீதம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது. அதேபோல பல்வேறு தொழில் மற்றும் சேவை நிறுவனங்களும்  ஊழியர்கள் குறைப்பை  கையில் எடுத்துள்ளன.

இந்நிலையில், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனமும் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது.  தனது அலெக்ஸா பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அமேசான் தற்போது அறிவித்துள்ளது. அலெக்ஸா பிரிவின் கீழ் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பணிபுரிபவர்களும் இதில் அடங்குவர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 கோடிக்கும் அதிகமான அலெக்ஸா கருவிகளை அமேசான் விநியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள அமேசான் ஊழியர்கள் வேலை இழக்கின்றனர். முன்னதாக கடந்த வாரம், அமேசான் தனது இசை மற்றும் கேமிங் பிரிவுகளிலும், சில மனிதவளப் பணிகளிலும் வேலைக் குறைப்புகளைச் செய்தது குறிப்பிடத்தக்கது. அமேசானின் இந்த நடவடிக்கையால் அதன் ஊழியர்கள் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர். 


இதையும் வாசிக்கலாமே...

சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!

பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!

நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!

பரபரப்பு... காங்கிரஸ் வேட்பாளருக்கு விழுந்த செருப்படி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in