
இஸ்ரேல் குண்டு வீச்சில் தனது மொத்த குடும்பத்தையும் இழந்துவிட்டு அல்ஜசீரா செய்தியாளர் அல் தஹ்தோ கதறும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போரை அறிவித்துள்ள இஸ்ரேல், தொடர் குண்டு வீச்சு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக காஸா பகுதியில் இதுவரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருவது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அல் ஜசீரா செய்தியாளர் வெயில் அல் தஹ்தோ பணி நிமித்தமாக போர் காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரது மனைவி, மகன், மகள் உட்பட குடும்பத்தினர் காஸா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் குண்டு வீச்சில் தஹ்தோவின் வீட்டின் மீதும் ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்து சிதறியது.
இதில் அவரது மகள், மகன், மனைவி உட்பட வீட்டிலிருந்த அனைவரும் உயிரிழந்தனர். இது குறித்த தகவல் தஹ்தோவிற்கு தெரிவிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்த உடல்களை பார்க்க அவர் விரைந்து உள்ளார்.
தனது மகளின் சடலத்தை கையில் ஏந்தியபடி, தஹ்தோ கதறியழும் காட்சிகள் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என பல நாடுகளும் வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு; கேரளத்தில் மீண்டும் பரபரப்பு!
அதிர்ச்சி... தூக்கில் தொங்கிய 10 ம் வகுப்பு மாணவி! மர்ம மரணமாக போலீஸார் விசாரணை!
பெரும் சோகம்... டேங்கர் லாரியை மறைத்த பனிமூட்டம்... விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!
தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலியான பரிதாபம், 50 பேர் காயம்