ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்காவும் கேஜ்ரிவாலுக்கு வக்காலத்து... நியாயமான விசாரணைக்கு வலியுறுத்தல்!

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என ஜெர்மனியைத் தொடர்ந்து அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளது.

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும், அம்மாநில முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்தியா முழுவதும் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. மேலும், ஆம் ஆத்மி கட்சியினர் கேஜ்ரிவாலை விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கேஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கடந்த வெள்ளிக்கிழமை கூறுகையில், “நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான தரநிலைகள் கேஜ்ரிவால் வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என கருத்து தெரிவித்திருந்தார்.

ஜெர்மன் தூதரக அலுவலரிடம் இந்தியா கண்டனம்
ஜெர்மன் தூதரக அலுவலரிடம் இந்தியா கண்டனம்

ஜெர்மனியின் இந்த கருத்துக்கு இந்தியா கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதரக அதிகாரியை வரவழைத்த மத்திய அரசு, இந்தியாவின் உள் விஷயங்களில் அப்பட்டமான தலையீடு இது என அதிருப்தி தெரிவித்தது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட கண்டனத்தில், “இதுபோன்ற கருத்துகள் இந்திய நீதித்துறை செயல்முறையில் தலையிடுவதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் நாங்கள் பார்க்கிறோம். பக்கச்சார்பான அனுமானங்கள் தேவையற்றவை" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது விவகாரத்தில் அமெரிக்கா கருத்து
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது விவகாரத்தில் அமெரிக்கா கருத்து

இந்நிலையில் ஜெர்மனிக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, "டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட செயல்முறையை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இந்திய அரசாங்கத்துடனான அவர்களின் (ஜெர்மனி) விவாதங்கள் குறித்து கருத்து தெரிவிக்க, ஜெர்மன் வெளியுறவு அமைச்சகத்தை அணுக உங்களுக்கு (ஊடகம்) பரிந்துரைக்கிறோம்" என தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்காவும் கேஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கருத்து குறித்து இந்திய அரசு தரப்பில் இதுவரை பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in