தலிபான் அரசு, மியான்மர் ராணுவ ஆட்சிக்கு ஐ.நா சபையில் அனுமதி மறுப்பு!

ஐ.நா.
ஐ.நா.hindu கோப்பு படம்

ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகமும், மியான்மர் இராணுவ ஆட்சியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு தங்களின் தூதரை அனுப்புவது குறித்த முடிவு இரண்டாவது முறையாக ஐ.நா நற்சான்றிதழ் குழுவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொது சபை வெள்ளிக்கிழமையன்று தலிபான், மியான்மர் ராணுவ ஆட்சிகளின் இருக்கைக்கான அனுமதி ஒத்திவைப்பு குறித்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க உள்ளது. இது லிபியாவின் ஐ.நா. இருக்கைக்கான உரிமைகோரல்களின் முடிவையும் ஒத்திவைத்தது. ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நாவின் நற்சான்றிதழ் குழுவில் ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளது.

மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய அரசுகள் ஐ. நா இருக்கைக்கான உரிமைகோரல்களை முன்வைத்து வருகின்றன. இந்த இருக்கைக்காக தலிபான் நிர்வாகம் மற்றும் மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு, கடந்த ஆண்டு அவர்கள் கைப்பற்றிய அரசாங்கங்களின் தூதர்களுக்கு எதிராக போட்டியிட்டன.

தலிபான் நிர்வாகம் மற்றும் மியான்மரின் இராணுவ ஆட்சியின் இருக்கைக்கான கோரிக்கையை ஐ.நா ஏற்றுக்கொள்வது என்பது, இருவராலும் கோரப்படும் சர்வதேச அங்கீகாரத்தை நோக்கிய முக்கியமான படியாக இருக்கும்.

ஏற்கெனவே மியான்மர் ராணுவ ஆட்சி மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகத்தின் நற்சான்றிதழ் குறித்த முடிவை ஒத்திவைக்க ஐ.நா. பொதுசபை கடந்த ஆண்டு முடிவு செய்தது. தற்போது மீண்டும் ஐ. நா நற்சான்றிதழ்கள் குழு டிசம்பர் 12 அன்று கூடி, மியான்மர், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவிற்கான நற்சான்றிதழ்களை பரிசீலிப்பதை ஒத்திவைக்கவும், எழுபத்தேழாவது அமர்வில் எதிர்காலத்தில் இந்த நற்சான்றிதழ்களை பரிசீலிக்கவும் வாக்கெடுப்பின்றி ஒப்புக்கொண்டது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் இந்த நற்சான்றிதழ்கள் குறித்த பரிசீலனை நடைபெறும்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசிடம் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆங் சான் சூகியின் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து மியான்மரின் இராணுவ ஆட்சியைக் கைப்பற்றியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in