
கனடாவில் இளம்பெண் ஒருவர் தான் தூங்கும் படுக்கையில் பாதியை வாடகைக்கு விடத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த அன்யா எட்டிங்கர் கனடாவின் டோரண்டோவில் வசிக்கிறார். சமூக ஊடக தளமான Facebook Marketplace ல் இதனை அவர் பகிர்ந்துள்ளார். தான் ஒரு 'படுக்கைத் துணையை' தேடுவதாக அதில் கூறியுள்ளார். தனது கிங் சைஸ் படுக்கையை வாடகைக்கு விட்டு நன்றாக சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் எந்தக் கடின உழைப்பும் இல்லாமல் பெரும் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். தன் படுக்கையில் பாதியை யார் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இருப்பினும், இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. அவரது பாதி படுக்கையை வாடகைக்கு எடுப்பவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தன்னுடன் வாழ வேண்டும் என்ற நிபந்தனை விதித்துள்ளார். டோரண்டோ மிகவும் விலையுயர்ந்த நகரம். இங்கு அறை வாடகை மிகவும் அதிகமாக உள்ளது மற்றும் சாதாரண மக்கள் இந்த வாடகையை கொடுக்க சிரமப்படுகிறார்கள். அதனாலதான் ஒரு பெட் மேட்டை தேடுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்தப் படுக்கைக்கான வாடகை மாதம் 900 கனேடிய டாலர்கள் (இலங்கை பணமதிப்பில் ரூ.2.14 லட்சம்) என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது பாதி படுக்கையை வாடகைக்கு விடும் பெண்ணின் செயல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ
பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!
ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி