நான் வெளியே வந்திருக்காவிட்டால்..!- ரஷ்ய வீரரால் 16 வயது உக்ரைன் பெண்ணுக்கு நடந்த கொடுமை

நான் வெளியே வந்திருக்காவிட்டால்..!- ரஷ்ய வீரரால் 16 வயது உக்ரைன் பெண்ணுக்கு நடந்த கொடுமை

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் 50 நாட்களுக்கு மேலாக நீட்டித்து வருகிறது. பல நகரங்களை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள், குழந்தைகள் இறந்துவிட்டனர். இதனிடையே ரஷ்ய வீரர்களின் அட்டூழியம் உக்ரைனில் நடந்து வருகிறது. இளம்பெண்களிடம் அவர்கள் அத்துமீறி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ள கெர்சன் என்ற கிராமத்தில் 16 வயதுடைய 6 மாத கர்ப்பிணி ஒருவரை வலுக்கட்டாயமாக ராணுவ வீரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ரஷ்ய படைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அடித்தளத்தில் குடும்பத்துடன் பதுங்கியுள்ளார். உணவுக்காக மாலை நேரத்தில் குழந்தைகளுடன் கர்ப்பிணி பெண் தனது குடும்பத்தினருடன் வெளியே வந்துள்ளார். அப்போது, மது போதையில் இருந்த ரஷ்ய வீரர் ஒருவர் அந்த குடும்பத்தினரை பார்த்துள்ளார். அருகில் வந்த ராணுவ வீரர், அனைவருடைய வயதை கேட்டுள்ளார்.

அதில் 12, 14 வயதில் இரண்டு சிறுமிகளுடன் 16 வயதுடைய கர்ப்பிணியும் இருந்துள்ளார். முதலில், அந்த கர்ப்பிணியின் தாயாரை அழைத்துள்ள ராணுவ வீரர், அவரை விட்டுவிட்டு, கர்ப்பிணியை அழைத்துள்ளார். அப்போது, உடைகளை களையும்படி கூறிய ராணுவ வீரரிடம் முடியாது என்று கூறியுள்ளார் கர்ப்பிணி. உடனே, அந்த ராணுவ வீரர், என்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் இன்னும் 20 பேரை கூப்பிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன கர்ப்பிணி, ராணுவ வீரரின் செயலுக்கு உடன்பட்டுள்ளார். இதனை பார்த்த சகவீரர் ஒருவர், தடுக்க முயன்றுள்ளார். ஆனால், போதையில் இருந்த வீரர் கேட்கவில்லை. அந்த கர்ப்பிணியை கொல்லவும் முயன்றுள்ளார் ராணுவ வீரர்.

உக்ரைனில் தனக்கு நடந்த கொடுமைகளை சிஎன்என் செய்தி சேனலுக்கு அந்த 16 வயது கர்ப்பிணி அளித்த பேட்டியில், அந்த ராணுவ வீரருக்கு நீல நிற கண்கள் இருந்தன. வேறு எதுவும் எனக்கு நினைவில்லை. நாங்கள் உணவுக்காக வெளியே வரவில்லை என்றால், எங்களை அவர் பார்த்திருக்கமாட்டார். என்னை தொட்டிருக்க கூடமாட்டார்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in