உலகை உலுக்கும் 9 வயது உக்ரைன் சிறுமியின் உருக்கமான பாடல்

உலகை உலுக்கும் 9 வயது உக்ரைன் சிறுமியின் உருக்கமான பாடல்
உக்ரைன் சிறுமி அமிலி

உக்ரைனில் நடந்து வரும் போரால், லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்க்கை துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தந்தையைப் பிரிந்து செல்லும் மகளின் கண்ணீர் வீடியோ சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் கணக்கச் செய்தது. ஆனால் நாளுக்கு நாள் உக்ரைன் மீதான ராஷ்யாவின் தாக்குதல் உக்கிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் அமைதி வேண்டி 9 வயது உக்ரைன் சிறுமி அமிலி உருக்கமான பாடலை பாடி இருக்கிறார். ராணுவ உடையணிந்து கண் கலங்க அச்சிறுமி, ‘என் வாழ்க்கையை நான் வரைகிறேன்’ பாடுவதை பார்த்தாலே மனம் வெம்புகிறது.

அமீலி பாடும் பாடலின் பொருள் இதோ:

என் வாழ்க்கையை நான் வரைகிறேன்...

என்னுடைய கதை இது...

சாதாரண, எதிர்க்கும் திராணி அற்ற என் தாயும் தந்தையும் என்னை ஒருநாள் இங்கு அழைத்து வந்தார்கள்

என் வாழ்க்கையை நான் வரைகிறேன்...

மையுயூயூ மொய்ஜஷா

வன்முறை மூண்ட பூமிக்கு எதிர்காலம் இல்லை

என் வாழ்க்கையை நான் வரைகிறேன்...

மையுயூயூ மொய்ஜஷா

கனவு பறிக்கப்பட்டதும் உங்களை அச்சம் பீடிக்கும்

குழந்தைகள் விளையாடவில்லை தங்களது தாய்மார்கள், தந்தைமார்களுடன் தப்பி ஓடினார்கள்

இது அக்கிரமம்

சூரியன் அதன்பின் ஒருபோதும் வானில் உதிக்கவில்லை

தெருக்கள் ஆளரவமற்று வெறிச்சோடி கிடந்தன

ஒவ்வொரு நகரமும்

ஒவ்வொரு நாளும் இப்படியே கடந்தது

என் வாழ்க்கையை நான் வரைகிறேன்...

மையுயூயூ மொய்ஜஷா

வன்முறை மூண்ட பூமிக்கு எதிர்காலம் இல்லை

அமைதிக்காக பிரார்தனை செய்தவர்களும் இருந்தார்கள்...

ஆனால் அவரும் எம்மை போலவே அழுதார்

தனது வீட்டைவிட்டு பிரிந்து எம்மை போலவே அவர் அழுதார்

ஒருபோதும் திரும்பி வரமுடியாததாக அவர் வாழ்க்கை மாறிப்போனது

அமைதியென்பதில்லை

அன்பென்பதில்லை

பீரங்கியிலிருந்து பாயும் குண்டு மவுனத்தை உடைத்தபோது

இரவை நடுங்கச் செய்தபோது

உலகம் கண்களை இறுக்க மூடிக்கொள்கிறது

ஒரு பெட்டிக்குள் வாழ்க்கை அடைக்கப்பட்டுவிட்டது

பணம் சட்டைப்பையில் அடைக்கப்பட்டுவிட்டது

ஆனால் எங்களிடம் துளியும் நம்பிக்கை இல்லை

என் வாழ்க்கையை நான் வரைகிறேன்...

மையுயூயூ மொய்ஜஷா

வன்முறை மூண்ட பூமிக்கு எதிர்காலம் இல்லை

என் வாழ்க்கையை நான் வரைகிறேன்...

மையுயூயூ மொய்ஜஷா

கனவு பறிக்கப்பட்டதும் உங்களை அச்சம் பீடிக்கும்

என் வாழ்க்கையை நான் வரைகிறேன், நீண்ட பயணத்துக்குப் பிறகு இரவில் எல்லாமே மாறிப்போனது

இப்போது நான் இங்கிருக்கிறேன்

குழந்தைகள் ஓடி விளையாடவில்லை

போரினால் தப்பி ஓடுகிறார்கள்

இது என்று முடியும் என்பது யாருக்குத் தெரியும்?

’என் வாழ்க்கையை நான் வரைகிறேன்’ என்ற இந்த பாடலில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு சொல்லும் கேட்போர் மனதை நிலைகுலையச் செய்கிறது. உலகெங்கிலும் இந்த பாடல் அவரவர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

ஆனால், ரஷ்யாவோ அல்லது இந்த போருக்குப் பின்னால் இருப்பதாக அறியப்படும் நேட்டோவோ இந்த பிஞ்சுக் குரலுக்குச் செவி சாய்க்குமா?

Related Stories

No stories found.