அடேயப்பா... ஒரு மது பாட்டிலின் விலை ரூ.12 கோடி?

ரூ.12 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்
ரூ.12 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்
Updated on
2 min read

உலகின் மிகவும் பழமை வாய்ந்த மது பாட்டில் ஒன்று லண்டனில் ஏலம் விடப்பட உள்ள நிலையில், 12 கோடி ரூபாய் அளவிற்கு ஏலம் போகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மெக்காலன் என்ற நிறுவனம் 1926-ம் ஆண்டு முதல் ஸ்காட்ச் வகை விஸ்கி மதுபானங்களைத் தயாரித்து வருகிறது. 60 ஆண்டுகளில் சுமார் 40 பாட்டில்களை மட்டுமே இந்த நிறுவனம் தயாரித்து உள்ளதாக கூறப்படுவதால், இந்த மதுபாட்டில்களை, செல்வந்தர்கள் விலைக்கு வாங்கி, அவர்களின் தனிப்பட்ட சேகரிப்பில் பாதுகாத்து வருகின்றனர்.

இதனால் இந்த வகை விஸ்கிகளின் விலை பல கோடி ரூபாய் அளவிற்கு ஏலம் விடப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இதே வகை விஸ்கி பாட்டில் ஒன்று ஏலம் விடப்பட்டபோது, இந்திய மதிப்பில் சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு ஏலம் போனது.

ரூ.12 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்
ரூ.12 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்

இது அதற்கு முன்பாக ஏலம் போன பழமையான மது வகைகளின் விலைகளின் சாதனையை முறியடித்து இருந்தது. இந்த நிலையில் அதே காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு பாட்டில் மது, வருகிற நவம்பரில் விற்பனை செய்யப்பட உள்ளதாக சோத்பி ஏல நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.12 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்
ரூ.12 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்

இந்த மது பாட்டில் சுமார் 12 கோடி ரூபாய் அளவிற்கு ஏலம் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரபல இத்தாலிய கலைஞர் வெளாரியோ அடாமியின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட லேபிள் இந்த பாட்டிலில் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in