நாளை கடைசி தேதி... செல்போனைத் தொடாமல் இருந்தால் ரூ.8.31 லட்சம் பரிசு... பிரபல நிறுவனம் போட்டியில் பங்கேற்க அழைப்பு!

செல்போன் பயன்பாடு
செல்போன் பயன்பாடு
Updated on
2 min read

ஒரு மாதம் செல்போனைத் தொடாமல் இருந்தால், அவர்களுக்கு ரூ.8.31 லட்ச பரிசுத் தொகை,  ரெட்ரோ ஃப்லிப் மாடல் போன், மூன்று சிம் கார்டுகள் ஆகியவற்றை பரிசளிப்பதாக அமெரிக்கா நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.   

ஒரு மாதத்திற்கு அலைபேசியை பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு வித்தியாசமான போட்டியை பிரபல அமெரிக்க நிறுவனமான சிக்கி (Siggi) அறிவித்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் பங்கேற்கும் நபர்களுக்கு தரப்படும் பெட்டியில் அவர்களது மொபைல் போனை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதால் கிடைக்கும் பயன்களை தெரியப்படுத்துவதே இந்தப் போட்டியின் நோக்கம். 

இந்த போட்டியில், 30 நாட்கள் செல்போனைப் பயன்படுத்தாமல் தாக்குப்பிடித்து வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.8.31 லட்சம் பரிசுத் தொகையோடு ரெட்ரோ ஃப்லிப் மாடல் போன், எம்ர்ஜென்சிக்கு அழைக்க ப்ரீபெய்ட் சிம் கார்டுகள் தரப்படும்.

வாழ்க்கையில் எந்தவித கவன சிதறலும் ஏற்படாமல், சிக்கல் இல்லாமல் இருந்தாலே நிறைய ஆற்றல் கிடைக்கும். நம்முடைய வாழ்கையில் கவனத்தை சிதறடிப்பதில் மொபைல் போன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அந்நிறுவனத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆர்வம் இருக்கும் யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை நாளை ஜனவரி 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தில் உங்கள் பெயர், இ மெயில் முகவரி, நாடு, 18 வயதிற்கு மேற்பட்டவரா என்ற விவரங்களை அளித்து ஏன் உங்களுக்கு இந்த டிஜிட்டல் நச்சுநீக்க திட்டம் தேவைப்படுகிறது மற்றும் உங்கள் வாழ்க்கையில் இதனால் ஏற்படப்போகும் தாக்கம் என்ன? என்பதை விளக்கி கட்டுரை வடிவில் விண்ணப்பத்தோடு சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். 

போட்டியில் கலந்துகொள்வதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது. ஒருவர் ஒருமுறை மட்டுமே இந்த போட்டியில் கலந்துகொள்ள முடியும். அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் வசிக்கும் சட்டப்பூர்வ குடிமக்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தப் போட்டியில் தாராளமாக கலந்து கொள்ளலாம். போட்டி குறித்த மேலதிக நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் Siggi நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ளது. 

2024-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி, ஐந்து நீதிபதிகளின் முன்னிலையில் வெற்றி பெற்ற பத்து பேரின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பெரும் காலத்தின் மனசாட்சி... மகாத்மா காந்திக்கு கமல்ஹாசன் புகழாரம்!

குட்நியூஸ்... 6,244 காலிப்பணியிடங்களை நிரப்ப ஜூன் 9-ல் குரூப் 4 தேர்வு!

யாருடன் கூட்டணி?... இன்று முடிவு செய்கிறது பாமக!

'நயினார் நாகேந்திரனுக்கு எம்.பி சீட் கொடுத்தால்?'...பாஜகவை எச்சரிக்கும் போஸ்டரால் பரபரப்பு!

மறக்க மனம் கூடுதில்லையே... காதலியின் நினைவு நாளில் தற்கொலை செய்த காதலன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in