ஒவ்வொரு ஊழியருக்கும் 80 லட்சம் கிறிஸ்துமஸ் போனஸ்: வள்ளலாய் மாறிய பெண்மணி

ஒவ்வொரு ஊழியருக்கும் 80 லட்சம்  கிறிஸ்துமஸ் போனஸ்: வள்ளலாய் மாறிய பெண்மணி

தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸாக ஒவ்வொருவருக்கும் 80 லட்ச ரூபாயை பெண்மணி ஒருவர் வழங்கிய செய்தி இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கரோனா பேரழிவிக்குப் பின் உலகம் முழுவதும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை தங்கள் நிறுவனங்களில் இருந்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ஃபேஸ்புக்,ட்விட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.

இந்த நிலையில், தனது ஊழியர்கள் ஒவ்வொருக்கும் கிறிஸ்துமஸ் போனஸாக 80 லட்ச ரூபாயை ஒரு பெண்மணி வழங்கி அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ராய் ஹில் நிறுவனத்தைச் சேர்ந்த ரைன் ஹார்ட் என்ற பெண்மணி தான் இந்த கிறிஸ்துமஸ் போனஸை வழங்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ராய் ஹில் நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் இந்த நிறுவனம் 3.3 பில்லியன் லாபம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், ராய் ஹில் நிறுவனத்தில் பணியாற்றும் பத்து ஊழியர்களுக்கு ஒவ்வொருவருக்கும் இந்திய ரூபாய் மதிப்பில் தலா 80 லட்ச ரூபாயை அவர் வழங்கியுள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்குமுன்பு வேலையில் சேர்ந்தவருக்கும் இந்த போனஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மற்ற ஊழியர்களுக்கும் ரைன் ஹார்ட் லட்சக்கணக்கான ரூபாயை போனஸாக வழங்கியுள்ளார். தனது ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸை வாரி வழங்கிய ரைன் ஹார்ட்டின் நல்ல உள்ளத்திற்கு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in