
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் ஒட்டுமொத்த உலகத்தையுமே முடக்கிப்போட்டது. இந்நிலையில் தான் சீனாவில் தற்போது புதிய 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வைரஸ்கள் மனிதர்களை தாக்கும் தன்மை கொண்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன்பிறகு அடுத்தடுத்து பிற நாடுகளுக்கு அந்த வைரஸ் பரவியது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் கொரோனா பிடியில் சிக்கி அதிக உயிரிழப்புகளை சந்தித்தன. 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்ட நிலையில் அந்த வைரஸ் பரவல் சீனாவில் இருந்து தான் பரவியதாக அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் குற்றம்சாட்டின.
மேலும் உயிரியல் போரை தொடங்குவதற்காக சீனா மேற்கொண்ட ஆய்வே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனா இதற்கு மறுப்பு தெரிவித்தாலும், வைரஸ் பரவல் அங்கிருந்தே பரவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் உலகையே திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சீனாவில் புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதோடு இந்த வைரஸ்கள் மனிதர்களை தாக்கும் தன்மையுடன் இருப்பதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சீனாவின் தெற்கு கடற்கரையில் உள்ள ஹைனான் தீவில் தான் இந்த புதிய 8 வைரஸ்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எதிர்காலங்களில் கொரோனா போன்ற வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் அதில் இருந்து மனிதர்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆய்வின்போது வவ்வால்கள் உள்பட பல்வேறு உயிரினங்களிடம் இருந்து 700 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் தான் புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கண்டறியப்பட்டுள்ள 8 வைரஸ்களில் ஒரு வைரஸ் என்பது SARS-CoV-2 எனும் கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்ததாகும்.
இந்த புதிய வைரஸ்கள் பரவ தொடங்கினால் மனிதர்களையும் தாக்கும் தன்மையை கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரம் வைரலாஜிகா சினிமா எனும் இதழில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!
33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!