லண்டனில் இந்திய வம்சாவளி பெண் கொலை; 22 வயது இளைஞர் வெறிச்செயல்!

இந்திய வம்சாவளி மூதாட்டி அனிதா முகே
இந்திய வம்சாவளி மூதாட்டி அனிதா முகே

வடமேற்கு லண்டனில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் 66 வயது இந்திய வம்சாவளி மூதாட்டியை 22 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

லண்டனில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா முகே (66), அங்குள்ள தேசிய சுகாதார சேவையில் (என்எச்எஸ்) பகுதி நேர மருத்துவ செயலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் வடமேற்கு லண்டன் எட்க்வேர் பகுதியில் உள்ள பர்ன்ட் ஓக் பிராட்வே பேருந்து நிறுத்தத்தில் அனிதா முகே காத்திருந்தார்.

கத்தியால் குத்தி கொலை
கத்தியால் குத்தி கொலை

அப்போது ஜலால் டெபெல்லா (22) என்ற இளைஞர், அனிதா முகேவின் மார்பு, கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தினார். இந்த சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு ஓடினர். இதற்கிடையே ஜலால் டெபெல்லா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர், இதுகுறித்து ஆம்புலன்ஸுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, படுகாயமடைந்த அனிதா முகே, அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் ஜலால் டெபெல்லா, லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

அவர் அனிதா டெபெல்லாவை எதற்காக கத்தியால் குத்தினார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. போலீஸார் அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய வம்சாவளி மூதாட்டி, இளைஞரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in