ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

ஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் அங்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் ரிங் ஆப் பெயர் என்கிற கடலுக்கு அடியில் எரிமலைகள் அதிகம் நிறைந்துள்ள பகுதியில் ஜப்பான் நாடு அமைந்துள்ளது. பல்வேறு தீவுகளை கொண்ட இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் தோன்றுவது இயல்பான ஒன்று. பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களால் ஜப்பான் நாட்டில் அவ்வப்போது சுனாமி போன்ற பேரழிவுகள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் டொரிட்ஷிமோ தீவுக்கு அருகே காலை 11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற சக்தி வாய்ந்த அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு 550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள இசூ தீபகற்பத்தில் உள்ள தீவுகளுக்கு ஒரு மீட்டர் உயரத்திலான சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in