சீனாவில் 6.1 ரிக்டரில் அதிர்ந்த நிலநடுக்கம்: 4 பேர் உயிரிழப்பு, 41 பேர் காயம்

சீனாவில் 6.1 ரிக்டரில் அதிர்ந்த நிலநடுக்கம்: 4 பேர் உயிரிழப்பு, 41 பேர் காயம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நேற்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர், 41 பேர் காயமடைந்துள்ளனர் என்று சீன நிலநடுக்க நிவாரண மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும், காயமடைந்த மற்ற 40 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் நிலநடுக்க நிவாரண மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக யான் நகரில் மொத்தம் 13,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தொடர்ந்து பேரிடர் மீட்பு பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மூன்றாம் நிலை தேசிய அவசரகால நிலை செயல்படுத்தப்பட்டது என்று அவசரகால மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4 மாதங்களில் 4-வது முறையாக நிலநடுக்கம்

சீனாவில் கடந்த 4 மாதங்களில் ஏற்பட்டுள்ள நான்காவது நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக மார்ச் 26-ல் சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 13-ல் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யிபின் நகரின் ஜிங்வென் கவுன்டியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஏப்ரல் 15-ம் தேதி 5.4 ரிக்டர் அளவில் கிங்காய் மாகாணத்தில் உள்ள டெலிங்கா நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in