ஆட்டம் காட்டும் அதிபர் ட்ரம்ப்!

ஆட்டம் காட்டும் அதிபர் ட்ரம்ப்!

இன்று உலகின் பல நாடுகள் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி பெரும் பிரச்சினைகளைச் சந்தித்துவருகின்றன. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள்தான். சர்வதேச அளவில் பொருளாதாரச் சந்தை பின்னடைவைச் சந்திப்பதற்கு இவர் முழுமுதற் காரணியாகிவிட்டார்!

ஜனவரி 2017-ல், அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற திலிருந்தே இவரது ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. உலக அளவில் குடியேற்றத்தை பெரும் குற்றமாக மாற்றியது இவருடைய அறிவிப்புகள்தான். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது மட்டுமே என்று அறிவித்தது, ஹெச் 1 பி விசா விவகாரம் என அடுத்தடுத்து சர்ச்சைகளைக் கிளப்பினார். மேலும், உலக நாடுகளோடு வெவ்வேறு விதங்களில் மல்லுக்கட்டி நிற்கிறார். தன் தனிப்பட்ட விவகாரங்களைக்கூட சர்வதேசப் பிரச்சினையாக மாற்றி தேவையற்ற சிக்கல்களை உருவாக்கிக் கொண்டே வருகிறார் ட்ரம்ப். ரஷ்யாவுடனான விரோதப் போக்கையும் இவர் விடுவதாயில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ரஷ்யாவைத் தாக்குவதிலேயே குறியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த ட்ரம்ப் - புதின் சந்திப்பு உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் ரஷ்யா மீது பொருளாதார தடையை அறிவித்தார் ட்ரம்ப். சிரியா உள்நாட்டுப் போரில் ரஷ்யாவுக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்களை ஆதரித்துவரும் போக்கையும் இவர் மேலும் தீவிரமாக்கி வருகிறார்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in