அமெரிக்க, வடகொரிய அதிபர்களின் நேருக்கு நேர்!

அமெரிக்க, வடகொரிய அதிபர்களின் நேருக்கு நேர்!

உலகமே பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் இருவர் – அதிலும் எதிரெதிர் துருவங்கள் – அமைதி நோக்குடன் கை குலுக்கவிருக்கிறார்கள். எதிரும் புதிருமாக இருக்கும் அமெரிக்க அதிபரும், வடகொரிய அதிபரும் முதல் முறையாகச் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டிருப்பது அமெரிக்கா, கொரியாவைத் தாண்டியும் முக்கியமான செய்தி ஆகியிருக்கிறது. 

அணு ஆயுதச் சோதனை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளால்  சர்வதேச சமூகத்தைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது வட கொரியா. அதிலும் கிம் அதிபராகப் பொறுப்பேற்ற பின் எந்த நேரத்தில் எது நடக்குமோ எனும் பதற்றத்தைத் தொடர்ந்து ஏற்படுத்திவந்தார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின் சூழல் இன்னும் மோசமானது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் மாறி மாறிப் போர் மிரட்டல்களை விடுத்து உலக அமைதியைக் கெடுத்தார்கள்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.